ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆடு மாடு வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு மாவட்ட ஆடு மாடு வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.