அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை ேபாலீசார் கைது செய்தனர்.;
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக வெம்பக் கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தியதில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செபஸ்தியான் (வயது 44) என்பவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகள் மற்றும் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர்.