ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முத்துப்பேட்டை சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு என்று மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், மாணவர்களிடம் விடுதியில் அளிக்கப்படும் உணவு மற்றும் குடிநீர், படுக்கை வசதி, விடுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் மாணவர்களிடம் விடுதியில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விரைவில் விடுதியின் அனைத்து கட்டமைப்புகளும் சரி செய்யப்படும் என துறைத் தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.