வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அவ்வப்போது உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் எண்ணப்பட்டது. இதில் மொத்தம் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வசூலானது. அப்போது கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.