இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-10 20:05 GMT
விருதுநகர்,
மதுரை மாவட்டம் சந்தையூரை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது20). இவர் தனது தந்தை சுந்தரமூர்த்தி (49) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி அருகே செவல்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றுவிட்டு விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை சுந்தரமூர்த்தி ஓட்டி வந்தார். விருதுநகர்- சிவகாசி ரோட்டில் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் சுந்தரமூர்த்தி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் லாரி டிரைவர் காரைக்குடியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்