12 வழக்குகளில் தொடர்புடையவரை போலி என்கவுண்ட்டர் செய்ய திட்டமா?டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு

12 வழக்குகளில் தொடர்புடையவரை போலி என்கவுண்ட்டர் செய்ய திட்டமா? டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

Update: 2022-03-10 20:03 GMT
மதுரை, 

மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தவறான நட்பின் காரணமாக என் மீது கடந்த 2008-ம் ஆண்டு, மதுரை கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மதுரை மாநகர போலீசார், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத போதெல்லாம், என்னை குற்றவாளியாக சித்தரிக்க தொடங்கினர். இதனால் என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகமானது. அதன்படி, எஸ்.எஸ்.காலனி, சுப்பிரமணியபுரம், பரமக்குடி, கீரைத்துறை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் என் மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் போலீசார் என்னை போலி என்கவுண்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கென சிறப்பு குழுவை அமைத்திருப்பதாக தெரிய வருகிறது. ஆகவே, நான் சரணடைய வாய்ப்பு வழங்கி, வழக்கு விசாரணைகளை தொடர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் வழக்கு குறித்து, தமிழக டி.ஜி.பி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்