மகளிர் தின விழா

கொரடாச்சேரியில் மகளிர் தின விழா நடந்தது.

Update: 2022-03-10 19:22 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பூந்தமிழ்பாவை தலைமை தாங்கினார். கல்விக்குழு உறுப்பினர் உமர்முக்தர் முன்னிலை வகித்தார். ஆயுர்வேத டாக்டர் ஸ்ரீவைஷ்ணா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய மருத்துவத்தின் மகத்துவத்தையும், ஆயுர்வேதத்தின் சிறப்பையும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்