கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
அத்திக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வடுவூர்:
மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலம் ஊராட்சி அத்திக்கோட்டை கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற முகாமில் கால்நடை மருத்துவர் ஜெயபாலன் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் செங்குட்டுவன், மணிகண்டன், உதவியாளர்கள் மோகன், குமுதவல்லி, பாரதிமோகன், மகேந்திரன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு பி.பி.ஆர்.தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப்பரிசோதனை செய்தல், சினை ஊசி போடுதல் மற்றும் சினை மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர் சேகர் முகாமை தொடங்கி வைத்து சிறந்த முறையில் கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முகாமில் செருமங்கலம், அத்திக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.