4 மாநிலங்களில் வெற்றி:பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

4 மாநிலங்களில் வெற்றி பெற்றதால் பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Update: 2022-03-10 19:03 GMT
கரூர், 
பஞ்சாப், உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் பா.ஜனதாவினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா ரவுண்டானாவில் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்