லாரி மோதி வாலிபர் படுகாயம்

லாரி மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-03-10 18:59 GMT
நொய்யல், 
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஸ்ரீராம் (வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டிக்கு செல்வதற்காக நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வாசுதேவன் (53) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்