கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன.
கரூர்,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்களை அளவு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி கரூர் மாவட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சூரியநாராயணன், கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.