பொன்னமராவதி:
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடக்கு கரையில் அமைந்துள்ள பக்கீர் ஒலி முகமது சிக்கந்தர் அவுலியா தர்காவில் 37-வது ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. தர்காவின் டிரஸ்டி முகம்மது சுல்தான் தலைமை தாங்கினார். நாட்டாமை ஆர்.அப்பாஸ், கேசராபட்டி நாட்டாமை கரீம், சிக்கந்தர், பரம்பரை சந்தனக்கூடு தூக்குபவர் உஜிர் பாஷா, பைசூல் கரீம், ஹக்கிம், யூ.அப்துல் ரஹ்மான் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.