விவசாயின் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

விவசாயின் வீட்டில் 17 பவுன் நகை திருடப்பட்டது

Update: 2022-03-10 18:28 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே விவசாயின் வீட்டில் 17 பவுன் நகை, ரூ. 21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 
நகை, பணம் திருட்டு 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பருவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 47). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தங்கமணி  தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக சிங்கம்புணரி பகுதிக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி வேலைக்கு சென்று விட்டார். 
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டினுள் இருந்த பூரோவை உடைத்து அங்கு இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ. 21 ஆயிரத்து 500 ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
வலைவீச்சு 
இதற்கிடையே சிங்கம்புணரியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்த தங்கமணி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து தங்கமணி சிங்கம்புணரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்