அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாமுண்டி வழிகாட்டுதலின் படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு அமுக்ரா சூரணம் மாத்திரை வழங்கும் சித்த மருத்துவ முகாம் புல்வயலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதி தலைமை தாங்கினார். பரம்பூர் அரசு ஆரம்ப சுகா தார நிலைய சித்த மருத்துவர் சுயமரியாதை முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சித்தா மாத்திரைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ராசு செய்திருந்தார். இதேபோன்று கிளிக்குடி மாம்பட்டி, ஆகிய பகுதிகளிலும் சித்த மருத்துவ முகாம் நடந்தது.