பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்

Update: 2022-03-10 17:48 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகா குஞ்சங்குளம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி மகாதேவி (வயது 40). கூலித்தொழிலாளி. தேவகோட்டையில் வசித்து வந்த இவர்   கீழக்கோட்டை கிராமத்திற்கு செல்வதற்காக பஸ்சில் வந்தவர் திணை காத்தான் வயல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த நல்லபாம்பு ஒன்று மகாதேவியை கடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் மகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்