வேலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு வேலூர் மாவட்ட அனைத்து வங்கி ஊழியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டேட் வங்கி அலுவலர் சங்க வேலூர் கிளை செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். ஆற்காடு மண்டல செயலாளர் கலைவாணி, நிர்வாகிகள் பாலமுரளி, சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேங்க் ஆப் இந்தியா அலுவலர் சங்க உதவி பொது மேலாளர் ராஜாபரூரி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாகி சக்ரவர்த்தி நன்றி கூறினார்.
--