கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2022-03-10 17:35 GMT
திருக்கோவிலூர், 

கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமை யிலான போலீசார் பழைய கருவாட்சி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் 2 மொபட்டுகளில் சந்தேகமான முறையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் வெள்ளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அஜித்குமார் (வயது 23), உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சந்தோஷ் (23), வெள்ளையாம்பட்டு செல்வத் தமிழன் மகன் தமிழ்ச்செல்வன் (19) என்று தெரிந்தது. அவர்களை போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, 2 மொபட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்