ஆம்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
ஆம்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.;
ஆம்பூர்
ஆம்பூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஒரு தனியார் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாதனூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
முகாமில் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்திசீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வட்டாரக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.