கள்ளக்குறிச்சியில் தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சியில் தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-03-10 17:28 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னராசு (வயது 34). இவர் கடந்த மாதம் 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அருகே அணைகரைகோட்டாலம் பகுதியில் 108 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார்.

இதை அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரின் சின்னராசுவை கள்ளக்குறிச்சி போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கள்ளக்குறிச்சி கிளை சிறையில் இருந்த அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர். தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்