திட்டச்சேரி:-
திருமருகல் அருகே திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்புகலூர் ஊராட்சி அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தில்குமார் (வயது32) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.