நாளை மின்சாரம் நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் க.விலக்கு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
பெரியகுளம்:
க.விலக்கு துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, குன்னூர், அரைபட்டி தேவன்பட்டி, அன்னை இந்திரா நகர், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்தார்.