ஆம்பூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
ஆம்பூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் சாராயம் விற்பதாக உமராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். வெங்கடசமுத்திரம் ஏரி அருகே சாராயம் விற்ற பார்சனாபல்லி பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் வெங்கடசமுத்திரம் கூர்மாபாளையத்தில் வீட்டில் பதுக்கி சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கோபி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 ேபரிடம் இருந்து தலா 100 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.