ஆம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது
ஆம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பாலாற்றில் இருந்து பலர் மணல் கடத்துவதாக ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துச் சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி விசாரித்தனர். அவர், பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மணல் கடத்திய சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.