ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த நாய்

ஊருக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டியடித்த நாய்;

Update: 2022-03-10 16:22 GMT
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிமலையில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்பு பகுதி வழியாக கல்லார் வனப்பகுதிக்கு ஒற்றை காட்டுயானை இரவு நேரத்தில் சென்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அதே காட்டுயானை சமயபுரம் ஊருக்குள் புகுந்தது. யானையை கண்டதும் தெருநாய் ஒன்று குரைக்க தொடங்கியது. உடனே காட்டுயானை ஆவேசத்துடன் பிளிறியது.
இதை கேட்டதும், அங்குள்ள வீடுகளின் முன்பு தூங்கி கொண்டு இருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி எழுந்து உள்ளே சென்று பதுங்கினர்.

இதற்கிடையில் பிளிறியபடி விரட்டினாலும் விலகி செல்லாமல் தொடர்ந்து குரைத்துக்கொண்டே காட்டுயானையை தெருநாய் திரும்ப துரத்தியது. இது காண்போரை வியக்க வைத்தது. இதையடுத்து காட்டுயானை விரைவாக அருகில் இருந்த புதர் வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்றது.

மேலும் செய்திகள்