‘ரவுடி பேபி’ சூர்யா ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்

‘ரவுடி பேபி’ சூர்யா ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்

Update: 2022-03-10 16:20 GMT
கோவை

கோவை டி.ஐ.ஜி. அலுவலகத்தில், வீரபாண்டி பிரிவை சேர்ந்த முத்துரவி என்பவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தோம். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரும் சிறையில் உள்ளனர். இந்தநிலையில் புகார் கொடுத்த காரணத்துக்காக அவர்களது ஆதரவாளர்கள் மூலம் ரவுடி பேபி சூர்யா எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்