கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோர கடைகள் அடைப்பு
வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால் கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோர கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
வால்பாறை
வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால் கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோர கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
வால்பாறை
கோவை மவாட்டத்தில் வால்பாறை முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதிக்கு உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை, நீரார், சின்னக்கல்லார், சோலையாறு அணைப் பகுதிகள், 9-வது கொண்டைஊசி வளைவு காட்சிமுனை, ஹார்ன்பிள் காட்சிமுனை, வெள்ளமலை டனல் ஆகியவை முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
சாலையோர கடைகள் அடைப்பு
இந்த நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கூழாங்கல் ஆற்றில் தான் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்த கூழாங்கல் ஆற்று பகுதியில் சாலையோரத்தில் தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள், உணவுகள் உள்ளிட்டவை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரிகள் வியாபரம் செய்து வந்தனர்.
இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபரம் செய்வதில், தள்ளுவண்டி வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வால்பாறை போலீசார் அந்த பகுதியில் சாலையோர தள்ளு வண்டி வியாபாரங்களுக்கு தடைவிதித்து கடைகளை அடைத்து விட்டனர்.
சுற்றுலா பயணிகள் அவதி
இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலையோர கடைகள் இல்லாதால் கூழாங்கல் ஆற்றிற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே கூழாங்கல் ஆற்று பகுதியில் கடை நடத்தும் வியாபாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோர கடைகளை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.