விளாத்திகுளத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விளாத்திகுளத்தில் தோட்டத்தில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2022-03-10 15:39 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் கேசவன் நகர் பகுதியில் கார்த்திக் என்பவரின் தோட்டத்தில் தூத்துக்குடி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு பதுங்குகுழியில் இருந்த 400 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த தோட்டத்திற்கு சீல் வைத்தனர். கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். அவரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்