கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
மலுமிச்சம்பட்டி
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல்
கோவையை அடுத்த செட்டிபாளையம் வீரகாமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 14 வயதில் மகன் உள்ளனர்.
ராஜேஸ்வரி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
அவர், கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் அவர்கள் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்களிடம் தகராறு
இதை அறிந்த உறவினர்கள் ராஜேஸ்வரியை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை, உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராஜேஸ்வரியின் சாவுக்கு சீனிவாசன்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதாக தெரிகிறது.
இதை அறிந்த சீனிவாசன், அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
கைது
இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், ராஜேஸ்வரியின் உறவினர் அன்பரசு(22) என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின்பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்தனர்.