பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம்
சிறுணமல்லி ஊராட்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது
நெமிலி
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுணமல்லி ஊராட்சியில் பல்லாவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கல்வி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி அருணாச்சலம் முன்னிலை வகித்தார். நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, தனசேகரன், சரவணன், உள்ளாட்ச் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.