கழிநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் பலி

மும்பையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளிகள் விஷவாயு தாக்கி பலியாகினர்.

Update: 2022-03-10 15:05 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளிகள் விஷவாயு தாக்கி பலியாகினர்.
சுத்தம் செய்யும் பணி
மும்பை காந்திவிலி ஏக்தாநகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணி இன்று நடந்தது. இந்த பணியில் 4 தொழிலாளிகள் ஈடுபட்டனர். தொட்டியின் உள்ளே இறங்கிய 3 தொழிலாளிகள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை கண்ட வெளியே நின்றிருந்த மற்றொரு தொழிலாளி நடந்த சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். 

 தகவல் அறிந்த அப்பகுதி மக்கள்  தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
3 தொழிலாளிகள் பலி

 கழிவுநீர் தொட்டியில் மயங்கி கிடந்த 3 தொழிலாளிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே 3 தொழிலாளிகளும் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. 

 தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்