வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-10 14:53 GMT
தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 28). இவர் தனது நண்பர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு உடன் தங்கி இருந்த நண்பர்கள் சீனிவாசன், பாலா உணவு வாங்கிவர பஜார் பகுதிக்கு சென்றனர். அவர்கள் திரும்பி வீட்டுக்கு வந்தபோது ஜான்பீட்டரை காணவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் வாலிபர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தது ஜான்பீட்டர் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜான்பீட்டர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்