பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக பெயிண்டரிடம் மோசடி
பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெயிண்டரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, மார்ச்.10-
பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெயிண்டரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூய்மை பணியாளர் வேலை
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). பெயிண்டர். இவர் அதிக பணம் சம்பாதிக்க விரும்பி, வெளிநாட்டில் வேலை செய்ய முடிவு செய்தார். இதனை தனது நணபர் செவ்வேல் என்பவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் ராஜேசை நெல்லித்தோப்பு சின்ன கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (35) என்பவரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது ஸ்டாலின், ராஜேஷிடம் பிரான்ஸ் நாட்டில் தூய்மை பணியாளராக வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
பணம் மோசடி
இதனை தொடர்ந்து ஸ்டாலின், வெளிநாட்டில் வேலை வாங்கி தறுவதற்காக ராஜேஷிடம் பணம் கேட்டுள்ளார். அதன்படி கடந்த 10.12.2021 முதல் 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ், ஸ்டாலினின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் மூடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டபோதும், முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஷ் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஸ்டாலினை வலைவீசி தேடி வருகின்றனர்.