திருபுவனை தியேட்டரில் நடிகர் சூர்யா படத்தை திரையிட எதிர்ப்பு
திருபுவனை தியேட்டரில் நடிகர் சூர்யா படத்தை திரையிட பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருபுவனை, மார்ச்.10-
திருபுவனையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி பா.ம.க. செயலாளர் தேவசாரதி, துணைத்தலைவர் பாலபழனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர் தியேட்டர் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து திரைப் படம் திரையிடுவது தள்ளி வைக்கப்பட்டது.
சூர்யாவின் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்களும் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.