கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று தொழில் அமைப்புகள் வேண்டுகோள் தெரிவித்தனர்

கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று தொழில் அமைப்புகள் வேண்டுகோள் தெரிவித்தனர்

Update: 2022-03-10 14:34 GMT

கோவை

கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று தொழில் அமைப்புகள் வேண்டுகோள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி பட்ஜெட் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் பட்ஜெட்டில் மாநகராட்சியின் நிதி வருவாயை உயர்த்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் இந்திய தொழில் வர்த்தக சபை, ராக், இந்திய தொழில் கூட்டமைப்பு, ஓசை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

வரிகளை உயர்த்த எதிர்ப்பு

அப்போது, மாநகராட்சி நிதி வருவாயை உயர்த்த நகரில் வாகன பார்க்கிங் கட்டணத்தை அறிமுகப்படுத்துவது, 

மாநகராட்சி கட்டிடங்க ளுக்கு வாடகை உயர்வு, சொத்து வரியை உயர்த்தலாமா என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டனர்.

அப்போது தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும், கொரோனா பாதிப்பால் தொழில் உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்பட் டது. தற்போது தான் நிலைமை சீராகி வருகிறது. 

எனவே மாநகராட்சி பட்ஜெட்டில் வரி உயர்வு, பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. தேவையானால் ஒரு ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

குடிநீர் கட்டணம்

கூட்டத்தில், மாநகராட்சி முழுவதும் ஒரே சீரான குடிநீர் கட்டணம், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் வினியோகம், மரக்கன்று கள் நடுதல், குளங்களை பராமரிப்பது, 

மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க தேவையான நிதி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

மேலும் மாநகராட்சிக்கு கிடைக்கும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள், கடன் பெற்று நடத்தப்படும் பணிகள், கடனுக்குரிய வட்டி, பொறியியல், சுகாதாரம், நகரமைப்பு மற்றும் 

கல்விப் பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது ஆலோசனை செய்யப்பட்டது

இதையடுத்து பட்ஜெட் கலந்தாய்வு கூட்டம் மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்