கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு புறவழிச்சாலை திட்டத் துக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு புறவழிச்சாலை திட்டத் துக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
கோவை
கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு புறவழிச்சாலை திட்டத் துக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1,630 கோடி திட்டம்
கோவை நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகி றது. இதை தவிர்க்க மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை ரூ.1,630 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி றது.
அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது
கோவையில் மேற்கு புறவழிச்சாலை பாலக்காடு ரோடு சுகுணாபுரத் தில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 45 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இதற்காக மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், தீத்திப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம், மாதம்பட்டி பகுதி வரை ஒரு கட்டமாகவும்,
பேரூர், சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம் வரை 2-வது கட்டமாகவும்,
குருடம்பாளையம், பன்னிமடை, கூடலூர், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக 3-வது கட்டமாகவும் பணிகள் நடைபெற நிலம் கையகப்படுத் தும் பணி தொடங்கி உள்ளது.
நிலம் எடுப்பு
இதில் மொத்தம் 638 பேரிடம் இருந்து 306 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்த வேண்டும். 50 ஏக்கர் அரசு நிலம் இந்த திட்டத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. மேலும் நிலம் கையகப்படுத்த அரசு ரூ.370 கோடி ஒதுக்கி உள்ளது.
மதுக்கரையில் இருந்து மாதம்பட்டி வரை 10 கிலோ மீட்டர் தூரத் துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 50 சதவீதம் முடிவடைந்து விட்டது. அதற்காக ரூ.7½ கோடி வழங்கப்பட்டு உள்ளது.
மீதி 50 சதவீத நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதற்காக சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உரிய இழப்பீடு
மற்ற 22 கிலோ மீட்டர் தூரத்துக்கான நிலம் கையகப்படுத்த 2 மற்றும் 3-வது கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த பேச்சுவார்தை தொடங்கி உள்ளது. மேற்கு புறவழிச்சாலை திட்ட பகுதிக்கான நிலம் உரிய நில மதிப்பீட்டுடன் இழப்பீடு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நிலம் கொடுக்க தாமதப்படுத்தினால் கட்டாய நில கையகப்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.