பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்‌. இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது

பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்‌. இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது

Update: 2022-03-10 14:21 GMT

பேரூர்

பேரூர் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்‌. இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

காதல் திருமணம்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் மாலதி (வயது 21). 

இவர், காளியண்ணன்புதூரை சேர்ந்த தனது உறவினர் பார்த்திபன் (வயது 25) என்பவரை காதலித்து வந்தார். பார்த்திபன் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இதை அறிந்த மாலதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் மாலதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

மேலும் மாலதி தனது  தாயார் ருக்மணியை பார்க்க கூடாது. அவரிடம் பேசக்கூடாது என்று கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. 

இதனால் மனஉளைச்சலில் தவித்த மாலதிக்கும், கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாலதி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். 

மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் காளியண்ணன்புதூர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாலதியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதை அறிந்த மாலதியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலிஸ் நிலையம் வந்து, மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து மாலதியின் கணவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. எனவே அவரிடம் விசார ணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

இது குறித்து போலீ சார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மாலதிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்