விபத்தில் வாலிபர் பலி
கோபால்பட்டி அருகே பாறையில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்
கோபால்பட்டி:
நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ரியாஸ்கான் (வயது 21). இவர் திண்டுக்கல்லில் இருந்து நத்தத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோபால்பட்டியை அடுத்த கணவாய்பட்டியில் சாலை வளைவில் சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பாறையில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.