ஆபாச புகைப்படம் ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டல்
ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி பள்ளி ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி பள்ளி ஆசிரியையிடம் பணம் கேட்டு மிரட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரிசு பொருட்கள்
மும்பை மலாடு பகுதியை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் பள்ளி ஆசிரியையாக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 20-ந்தேதி சமூகவலைத்தளத்தில் இருந்து டோமி சாம்பேல் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். இவர்கள் சாட்டிங் செய்து வந்த நிலையில் செல்போன் நம்பரை பரிமாறி கொண்டனர்.
மேலும் பள்ளி ஆசிரியையிடம் அந்த நபர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இதையடுத்து அவரிடம் பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாகவும், இதற்கான சுங்கவரி செலுத்தி பார்சலை பெற்று கொள்ளும்படி தெரிவித்தார்.
கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்
இதனை நம்பிய பள்ளி ஆசிரியையிடம் சில நாள் கழித்து டெல்லியில் பார்சல் வந்து இருப்பதாக ஒருவர் அழைப்பு விடுத்தார். இதற்கான கட்டணம் ரூ.76 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். பின்னர் சுங்கவரி, சேவை வரி என கூறி மொத்தம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பள்ளி ஆசிரியை மறுப்பு தெரிவித்தார். ஆனால் கூடுதல் பணம் தராவிட்டால் வீடியோ காலில் இருந்த ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியை வன்ராய் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------------