கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-03-10 12:40 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும். மின்சார துறையில் தற்காலிக ஊழியர்களாக 19 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்