வத்தலக்குண்டு அருகே பஸ் மோதி தப்பாட்ட கலைஞர் பலி
வத்தலக்குண்டு அருகே பஸ் மோதி தப்பாட்ட கலைஞர் பலியானார்
வத்தலக்குண்டு:
நிலக்கோட்டை அருகே உள்ள வீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் சிவா (வயது 25). தப்பாட்ட கலைஞர். இவர் நேற்று உசிலம்பட்டியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு தப்படிக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விருவீடு அருகே நடகோட்டையை கடந்தபோது, உசிலம்பட்டியில் இருந்து அணைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சிவா சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.