திருவண்ணாமலை
செங்கம் தாலுகா சின்னகோளாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தனின் மகன் புருஷோத்தமன் (வயது 22). இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்தார்.
கடந்த 6-ந் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மனவேதனையில் நிலத்தில் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.