தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் காந்தி சாலையில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்த போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான கிருஷ்ணகிரி காந்தி நகரை சேர்ந்த பாலாஜி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.