ஓசூரில் தச்சு தொழிலாளி விபத்தில் பலி
ஓசூரில் தச்சு தொழிலாளி விபத்தில் பலியானார்.
ஓசூர்:
சூளகிரி அருகே உள்ள பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் கவிராஜ் (வயது 30), தச்சுத்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், ஸ்கூட்டரில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சீதாராம்மேடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று, ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கவிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.