கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அரசு நிதி
கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அரசு நிதியை சென்னை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
சென்னையில் கொரோனா நோய் தாக்கி இறந்த 6 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வீதம், ரூ.1½ கோடியை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை இறந்து போன போலீசாரின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியை நேரில் வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், அமல்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், அமலதாஸ், ஏட்டு கார்த்திகேயன், போலீஸ்காரர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ.25 லட்சம் நிதி உதவியை பெற்றனர்.