ஆசிரியர் மர்மச்சாவு
வாணாபுரம் அருகே காப்புக்காட்டில் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.;
வாணாபுரம்
வாணாபுரம் அருகே காப்புக்காட்டில் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பிணம்
வாணாபுரம் அருகே உள்ள கண்ணமடை காப்புக்காட்டில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலின் மகன் சிவபாலன் (வயது 40) என்று தெரிய வந்தது. இவர் தற்போது கீழ்செட்டிப்பட்டு பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார்.
பள்ளி ஆசிரியர்
மேலும் அவர் சே.கூடலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
ஆசிரியர் சிவபாலனின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் கிழித்துள்ளனர். மர்மச்சாவாக தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.