தூத்துக்குடியில் கலச விளக்கு வேள்வி பூஜை
தூத்துக்குடியில் ஆதிபராசக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் பங்காரு அடிகள் 82-வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு உலக சமாதானத்தை வலியுறுத்தியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. குருபூஜை, விநாயகர் பூஜையுடன் நடந்தது. தொடர்ந்து எண்கோண சக்கரம் அமைக்கப்பட்டு குருமேடை, சதுர யாககுண்டம், விநாயகர் சதுர யாககுண்டம், 3 அடுக்கு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் சக்திகொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு பக்தர்கள், தங்கள் கரங்களால் இளநீர் அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வழுதூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஜெகதீசன், தூத்துக்குடி அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் பிரசாத், சக்திபீட துணைத்தலைவர் இசக்கியப்பன், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்னன், வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா, திரு.வி.க. நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, கோவில்பட்டி சக்தி பீட தலைவர் அப்பாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சக்திபீட பொறுப்பாளர் சீனிவாசன் செய்து இருந்தார்.