மருத்துவ முகாம்

உலக மகளிர் தினத்தையொட்டி பனவடலிசத்திரம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-03-09 23:08 GMT
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருங்காலங்குளம் பஞ்சாயத்து மற்றும் சுஸ்லான் பவுண்டேஷன் சார்பில் நடந்த முகாமுக்கு மருக்காலங்குளம் பஞ்சாயத்து தலைவி மருதநாச்சியார் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். டாக்டர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். பஞ்சாயத்து துணைத்தலைவர் எஸ்.முருகன், கிராம வளர்ச்சி குழு தலைவர் முருகன், சுஸ்லான் பவுண்டேசன் மேலாளர் முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்