விபத்தில் வாலிபர் சாவு

நெல்லை அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-09 22:00 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் பால்துரை (வயது 27). இவர் டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தச்சநல்லூர் கணபதி மில் காலனி பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ேமாட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்டர் பால்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகள்