கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-03-10 03:15 IST
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் -சேரன்மாதேவி மெயின் ரோட்டில் சந்தனமாரியம்மன் கோவில், சுடலைமாடன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோவில்களின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகள்