விலை வீழ்ச்சியால் 500 ஹெக்டேர் தக்காளி செடிகளை அழித்த விவசாயிகள்
விலை வீழ்ச்சியால் 500 ஹெக்டேர் தக்காளி செடிகளை விவசாயிகள் அழித்தனர்
சிக்கமகளூரு: சித்ரதுர்கா மாவட்டம் தர்மாபுரா சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹரியாபுரா, முங்குசவல்லி, வேனுகல்குட்டா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி செடிகளை பயிரிட்டு சாகுபடி செய்து வந்தனர். தக்காளிகள் சாகுபடிக்கு தயாராக இருந்த நிலையில், அதன் கொள்முதல் விலை திடீரென குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து, 500 ஹெக்டேர் பரப்பளவிலான தக்காளி செடிகளை பிடுங்கி எறிந்து அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி பசவராஜ் என்பவர் கூறியதாவது:-
3 மாதத்திற்கு முன்பு 15 கிலோ தக்காளி ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அதிகளவு வருமான கிடைக்கும் என்று நம்பி நான் உள்பட பலர் தக்காளியை விளைவித்தோம். ஆனால் தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது. குறிப்பாக 15 கிலோ பெட்டி தக்காளி 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் தக்காளி செடிகளை நாங்களே அழித்துவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.